Posted by admin on 19-06-2026
தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி மாணவர்கள் சாதனை ....
RGBI ஃபெடரேஷன் கப் 2026, நடத்திய தேசிய அளவிலான 6 வது வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, அருணாச்சலப்பிரதேசம், தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் இருந்து அனைத்து வில்வித்தை வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்று 12 வயது உட்பட்ட பிரிவில் சி. ரித்திகா (ஆறாம் வகுப்பு) மற்றும் 10 வயதில் உட்பட்ட பிரிவில் நா. ரிதன் நாடராஜன் (இரண்டாம் வகுப்பு) முதலிடம் பெற்று பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குனர் சங்கீதா சத்தியன், கல்வி இயக்குநர் டாக்டர்.ராஜேஸ்வரி, முதல்வர் லூயிசா ரெமி வாழ்த்தினர்.
*காரைக்குடி ஸ்ரீ கலைவாணி இன்டர்நேஷனல் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் சாதனை*
CISCE Zonal அளவிலான ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் காரைக்குடி ஸ்ரீ கலைவாணி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் சிவகங்கை வீரர்கள் அசத்தல்
தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி சிவகங்கை வீரர்கள் அசத்தல் :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால
உள்ளரங்கிலும், மேட்டிலும் கபடி பயிற்சி அளிக்க வசதி ஏற்படுத்த வேண்டும் இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் கோரிக்கை
Leave a Comment
Your comment will be visible after admin approval.