Fri, Aug 28, 2026 10:04 AM

சிவகங்கை அருகே காவிரி

Posted by admin on 19-05-2026


சிவகங்கை அருகே காவிரி குடிநீர் குழாய் சேதம்: தண்ணீர் வீணாகும் அவலம்

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் சேதமடைந்ததால் குடிநீர் பனைமரம் உயரத்திற்கு பீறிட்டு வெளியேறி வீணாகி வருகிறது.

மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே ஏற்பட்ட இந்த சேதத்தால் ஒக்கூர், மதகுபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் குட்டை போல தேங்கி காணப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் வீணாகி வருவதில்  மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

எனவே, காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share: 107 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.