Posted by admin on 18-07-2026
காளையார்கோவிலில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் 37 ஜோடி மாடுகள் பங்கேற்பு! பார்வையாளர்கள் உற்சாகம்!
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவ
டி எல்லை பந்தயம் நடைபெற்றது. நடுமாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது. நடு மாட்டு பிரிவில் 21 ஜோடி மாடுகளும் சின்ன மாட்டுப் பிரிவில் 16 ஜோடி மாடுகளும் என மொத்தம் 37 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. காளையார்கோயில் - தொண்டி சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் மாடுகள் சீறிப்பாய்ந்து சென்று ஒன்றை ஒன்று முந்தி சென்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், அதனை ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா குழுவினர் சார்பில் ரொக்கம் மற்றும் கோப்பை பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தினை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான ரசிகர்கள் உற்சாகதோடு கண்டு களித்தனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.