Posted by admin on 24-05-2026
சிவகங்கை சமத்துவபுரத்தில் தமிழக வெற்றி கழக தெற்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு.
சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் ஏற்பாட்டில் சிவகங்கை தெற்கு ஒன்றிய புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ., குழந்தை ராணி நாச்சியார் மற்றும் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ., இளங்கோவன் மாவட்ட செயலாளர் முத்து பாரதி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதிய அலுவலகத்தை சிவகங்கை எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, கட்சிக்கொடியை ஏற்றி அலுவலக செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட்சியின் வளர்ச்சி, பொதுமக்கள் சேவை மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து நிர்வாகிகள் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் , பலர் கலந்து கொண்டனர் . மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டதுடன், அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானமாக உணவு வழங்கப்பட்டது.
புதிய அலுவலகம் மூலம் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், கட்சியின் அமைப்பு பணிகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.