Fri, Aug 28, 2026 11:00 AM

பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவிலில் ஆனித் தேரோட்டக் கோலாகலம்

Posted by Admin on 28-06-2026


பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவிலில் ஆனித் தேரோட்டக் கோலாகலம்

பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவில் ஆனி தேரோட்டம் கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கீரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே உள்ள பாகனேரியில் அமைந்துள்ள அருள்மிகு புல்வநாயகி அம்மன் கோவிலின் ஆனி மாத தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா, கடந்த 20ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. பெரிய தேரில் அருள்மிகு புல்வநாயகி அம்மனும், சிறிய தேரில் விநாயகப் பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். “அம்மா தாயே” என்ற பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆடி அசைந்து நகர்ந்த தேர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தன. தேரோட்டத்தின் போது பாகனேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூக்களைத் தூவி அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

 பக்தி பரவசத்துடன் நடைபெற்ற இந்த தேரோட்ட விழா, கிராம மக்களின் ஒற்றுமையையும் பாரம்பரிய பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

Share: 1,075 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.