Mon, Jun 29, 2026 11:16 AM

சிவகங்கை மாவட்டத்தில் தீவிர விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு

Posted by admin on 28-06-2026


சிவகங்கை மாவட்டத்தில் தீவிர விழிப்புணர்வு முகாம்    மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில் தீவிர விழிப்புணர்வு முகாம் ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவது, தாய்மார்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது இம்முகாமின் முக்கிய நோக்கமாகும்.

முகாமின் ஒரு பகுதியாக, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஓ.ஆர்.எஸ். (ORS) பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. மேலும் தாய்ப்பாலின் முக்கியத்துவம், ஓ.ஆர்.எஸ். கரைசல் தயாரிக்கும் முறை, துத்தநாக மாத்திரைகள் வழங்கும் முறை மற்றும் குழந்தைகளுக்கான சத்துணவு குறித்த விழிப்புணர்வு சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன், குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு வளர்ச்சி அட்டையில் பதிவு செய்யப்படுகிறது. எடை குறைவாக உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வயிற்றுப்போக்கைத் தடுப்பதற்காக உணவு உண்பதற்கு முன்பும், மலம் கழித்த பின்பும் கைகளை சுத்தமாகக் கழுவும் பழக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முகாமின் கீழ் மாவட்டத்தில் உள்ள 1,00,779 குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலா 2 ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் மற்றும் 14 துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் இந்த முகாமில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share: 1,346 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி 4 மாவட்டங்களில் இருந்து 52 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு சிவகங்கை மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா   அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மூன்று மாவட்டங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல் காரைக்குடியில் போலியோ சொட்டு  மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு காரைக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு சிவகங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! காரைக்குடியில் முகாமை தொடங்கி வைத்த அம
Leave a Comment

Your comment will be visible after admin approval.