Fri, Aug 28, 2026 10:05 AM

தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்

Posted by admin on 28-06-2026


தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் மற்றும் பெரிய நாயகி அம்பாள் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் மாவட்டத்தில் மிக முக்கிய ஆன்மீக மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும்


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்தக் கோவிலின் ஆனித் திருவிழா தேரோட்டம், மாவட்டத்தின் மிக முக்கிய ஆன்மீக மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் இக்கோவிலின் பெருந்திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கி, பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாளில், அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சொர்ணமூர்த்தீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரஹர மகாதேவா" கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


கடந்த 1998 ஆம் ஆண்டு தேரோட்டத்தின் போது தேர் வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பு சமூகத்தினுடைய ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இந்த தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது அதன்பின் 17 ஆண்டுகள் கழித்து உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது மூன்று ஆண்டுகளாக அனைத்து சமூகத்தினரின் பங்களிப்போடு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மிக அமைதியான முறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் தேரோட்டத்திற்காக தென் மண்டல ஐஜி, டிஐஜி- கல் மற்றும் எஸ்பிக்கள் தலைமையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேரோட்டம் வெறும் ஆன்மீக நிகழ்வாக மட்டுமல்லாமல் பல தசாப்த  கால சமூகப் பின்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அப்பகுதி மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சமத்துவ நிகழ்வாகவே இந்த தேரோட்டம் மாறியுள்ளது

இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் டி கே பிரபு மற்றும் மாவட்ட வருவாய் துறை அலுவலர் அமுதசுரபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share: 1,034 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.