Posted by Admin on 26-06-2026
வஞ்சினிப்பட்டியில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் பூக்குழித் திருவிழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வஞ்சினிப்பட்டி கிராமத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இந்து முஸ்லிம் இணைந்து அல்லாசாமி என்ற பூக்குழித் திருவிழாவை கொண்டாடினர்.
திருப்பத்தூர் அருகே வஞ்சினிப்பட்டி கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்து முஸ்லீம் இணைந்து கொண்டாடும் பூக்குழி திருவிழா இந்த பண்டிகையை இப்பகுதி மக்கள் அல்லாசாமி பண்டிகை என்றும் பூக்குழி திருவிழா என்றும் பல்வேறு பெயர்களில் 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. சாதி, மத பேதமில்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து இப்பகுதியில் இந்த விழாவை நடத்தி வருகின்றனர். 17 ம் நூற்றாண்டில் இருந்து சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் இந்த திருவிழா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்துக்களின் கலாச்சாரமும், இஸ்லாமியர்களின் கலாச்சாரம் இணைந்து ஒரு விழா கொண்டாடப்படுவது இங்கு மட்டும்தான். மக்களின் நல்வாழ்வுக்காகவும், மத ஒற்றுமை உலகறிய செய்யும் வண்ணமும் இவ்விழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. வஞ்சினிபட்டி கிராமத்தை பூா்வீகமாகக் கொண்ட சையதுமுகைதீன் குடும்பத்தினா் இத்திருவிழாவை கிராமத்தினரோடு இணைந்து நடத்தி வருகின்றனா். ஊர் முழுவதும் வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு . இந்துக்கள் இஸ்லாமியர்கள் என அனைவரும் விருந்து வைத்தனர். மாலை பூக்குழி வளா்க்கப்பட்டு சுவாமிக்கு பாத்தியா ஓதப்பட்டது. கிராம மக்கள் மல்லிகை பூ, சா்க்கரை வைத்து அல்லாவிடம் பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர். பின்பு பக்தர்களுக்கு சாம்பலை எடுத்து இஸ்லாமியர்கள் பூசி விடும் வினோத நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்பு கூடாரத்தில் வெள்ளி கைவிரல்கள் மல்லிகைப்பூக்களால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. பின் தொழுகை நடத்தப்பட்டு அதிகாலை 4 மணிக்கு கூடத்திலிருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்று ஊர் முழுவதும் கிராம மக்களோடு வலம் வந்தனர். பின்பு அக்கிராமத்தில் அமைக்கப்பட்ட பூக்குழியை 3 முறை சுற்றி வந்து பக்தர்கள் பூக்குழிக்குள் இறங்கினர். அப்போது பூக்குழிக்குள் இருந்த நெருப்பை இரு கைகளால் அள்ளி வாரி இறைத்தனர். அதன்பிறகு மண்வெட்டியால் நெருப்பை அள்ளி பெண்களுக்கு வழங்க அதை தங்களது சேலை முந்தானையில் பெண்கள் வாங்கிச் சென்றனர். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இந்த விழா பல தலைமுறையினா்களால் நடத்தப்பட்டு வருகிறது.
தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் மற்றும் பெரிய நாயகி அம்பாள் கோவிலில் ஆனித
முறையூரில் ஆனித் திருமஞ்சன விழா
முறையூரில் ஆனி திருமஞ்சன விழா: அன்னை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது
சிவகங்கை மாவட
வடவன்பட்டியில் கொடிவளைவுத் திருவிழா
வடவன்பட்டியில் கொடிவளைவுத் திருவிழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வடவன்பட்டியில் கொடிவளைவுத்
திருவிழ
Leave a Comment
Your comment will be visible after admin approval.