Fri, Aug 28, 2026 11:05 AM

தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் சிவகங்கை வீரர்கள் அசத்தல்

Posted by Admin on 24-06-2026


தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் சிவகங்கை வீரர்கள் அசத்தல்

தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி சிவகங்கை வீரர்கள் அசத்தல் :

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கிக்பாக்ஸிங் விளையாட்டு போட்டி வாக்கோ இந்தியா சார்பில் 2026 சப் -ஜூனியர் தேசிய கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஐபிஸ் ஸ்கூல் வளாகத்தில் 17 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள 28 மாநிலங்களில் இருந்து 1300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கு பெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக 117 வீரர் மற்றும் வீராங்கனையினர் பங்கேற்றனர். இதில் சிவகங்கை கிக்பாக்ஸிங் சங்கம் சார்பில்,13 வீரர்கள் கலந்து கொண்டு 2தங்கம், 3வெள்ளி, 4வெண்கலம் வென்றனர். இதில் ரா. ரூபன்சாய்சிவன் 8 மாநிலங்களை வீழ்த்தி கிக் லைட் போட்டியில் தங்கமும், பாயிண்ட் பைட் போட்டியில் வெள்ளியும், அ. ரஞ்சித் 5 மாநிலங்களை வீழ்த்தி தங்கமும், ஜெர்வின்ரியோ, விமலேஷ் வெள்ளியும், பிரஜீத்கிருஷ்ணன் 5மாநிலங்களை வீழ்த்தி இரட்டை வெண்கலமும் மற்றும் சாய்வின் பிரபு -42பிரிவில் வெண்கல பதக்கமும், நிதிஷ் பார்ம்ஸ் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று தமிழ்நாட்டிற்கும் சிவகங்கை மண்ணிற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்று மாணவனின் பயிற்சியாளர்கள் சித்ரா, பிரதீப், மற்றும் சிவகங்கை கிக்பாக்ஸிங் சங்க பொது செயலாளர் ச. குணசீலன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு, அணி இப்போட்டியின் 3வது ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.

Share: 595 Views

மேலும் படிக்க

உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர் உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர் உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி வீரர்   காரைக்குடி இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் மு.பிரனேஷ், நடப்பு உலக சதுரங மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை  கனிம வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.   சிவகங்கை மாவட்ட
Leave a Comment

Your comment will be visible after admin approval.