Fri, Aug 28, 2026 12:58 PM

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் பொறுப்பேற்பு

Posted by admin on 22-06-2026


சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் பொறுப்பேற்பு.

மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த ஜூன் 1ஆம் தேதி பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகாஷ், வெறும் 20 நாட்களிலேயே சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கடந்த ஜூன் 18ஆம் தேதி பொறுப்பேற்ற நிஷாந்த் கிருஷ்ணா, மூன்று நாட்களிலேயே மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். இதனால் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த நிர்வாக மாற்றங்கள் கவனம் பெற்றுள்ளன.

2014ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ச் அதிகாரியான ஆகாஷ், தென்காசி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்ற அவருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலப்பணிகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் புதிய ஆட்சியர் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share: 1,991 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.