Mon, Jun 29, 2026 01:32 PM

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

Posted by admin on 22-06-2026


சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா

சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா சிறப்பாக நடைபெற்றது

காரைக்குடி அருகே கலாம் கவி கிராமம், விசாலயன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 11-வது சர்வதேச யோகா தின விழா  உற்சாகமாக நடைபெற்றது.

கல்லூரியின் தாளாளர் முனைவர் சேது குமணன் வழிகாட்டுதலிலும், கல்லூரி முதல்வர் முனைவர் வி. பேபி ராணி  தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். உடல், மன மற்றும் ஆன்மிக நலனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு யோகாசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கல்லூரியின் என்.சி.சி. 9-வது பட்டாலியன் கேடட்டுகள் ஆர்வமுடன் பங்கேற்று யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியை என்.சி.சி. ஒருங்கிணைப்பாளரும் உதவிப் பேராசிரியருமான முனைவர் அ. கவியரசு  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மேலும், கல்லூரியின் உடற்கல்வித்துறை பேராசிரியர்களான ரகு மற்றும் செல்வி சங்கீதா ஆகியோர் நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர்.

யோகாவின் மகத்துவம், மன அமைதி, உடற்தகுதி மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சிறப்பாக நிறைவுற்றது. மாணவர்களின் ஒழுக்கம், ஒருமைப்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியலை ஊக்குவிக்கும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share: 2,450 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.