Posted by Admin on 27-06-2026
அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் சாகித்திய அகாதமியின் இலக்கிய அரங்கு
மத்திய அரசின் சாகித்திய அகாதமியுடன் இணைந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறை 'காரைக்குடி பகுதியில் வாழ்ந்து மறைந்த படைப்பாளர்கள்' என்னும் தலைப்பில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார், வீறுகவியரசர் முடியரசனார், கவிமாமணி ரெ.முத்து கணேசனார் ஆகியோர் பற்றிய இலக்கியக் கருத்தரங்கத்தினை சிறப்பாக நடத்தியது.
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மகள் எழுத்தாளர், முனைவர் தேவி நாச்சியப்பன் தலைமை வகித்து கருத்தமர்வை நடத்தினார். 'மூதறிஞர்' வ.சுப.மாணிக்கனார் பற்றி அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவரும், தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநருமாகிய மூத்த பேராசிரியர் சே.செந்தமிழ்ப்பாவை 'கவிமாமணி' ரெ.முத்து கணேசனார் குறித்து தேவகோட்டை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் உயராய்வு மைய இணைப்பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி, 'வீறுகவியரசர்' முடியரசனார் குறித்து மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி தமிழாராய்ச்சி மைய உதவிப்பேராசிரியர் முனைவர் மு.இறைவாணி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
முன்னதாக தேவகோட்டை, தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (எ) தமிழ் முடியரசன் வரவேற்புரையாற்றினார். தமிழ்ப்பண்பாட்டுமைய முனைவர் பட்ட ஆய்வாளர் கு.கார்த்திக் நன்றியுரையாற்றினார். வேர்கள் தமிழ் நாட்டார் கலைகள் பயிற்சி மைய நிறுவனர் முத்தமிழ் பாரதி, அழகப்பா பல்கலைக்கழக திறன்வளர் மேம்பாட்டு மைய மாணவர்கள் நா.மைதீன், வித்யா, மகேஸ்வரி, சிவதர்ஷினி ஆகியோர் இலக்கிய அரங்குகளில் சிறந்த பங்களிப்பிற்காக பாராட்டுப் பெற்றனர்.
தமிழ்ச்செம்மல் ஆறு.மெ.மெய்யாண்டவன், பேராசிரியர்கள் கார்மேகம், கணநாதன், பல்கலைக்கழக முன்னாள் துணைப் பதிவாளர் துரை.செல்வம், லி.ஜெயச்சந்திரன், எழுத்தாளர்கள் மோகன், துரை.அறிவழகன், பா.தென்றல், சிவபாரதி, நாச்சியப்பன், முனைவர் இரா.முருகேஸ்வரி, கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், சமூக ஆர்வலர் ராஜா முகமது, கவிச்செம்மல் ரெ.முத்துகணேசனாரின் குடும்பத்தினர், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களத்தினர், தமிழ்ப்பண்பாட்டு மைய, நுண்கலைத்துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இலக்கிய அரங்கில் பங்கேற்றனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மூத்த பேராசிரியர் சே.செந்தமிழ்ப்பாவை செய்திருந்தார்
நகர வைரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
வயிரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி செட்டியார்
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்
வித்யா கிரி கல்லூரியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா
புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவியரசு கண்ணதாசன் பிறந்த
Leave a Comment
Your comment will be visible after admin approval.