Mon, Jun 29, 2026 01:32 PM

கீழச்சிவல்பட்டி பள்ளியில் சர்வதேச யோகா தினம்

Posted by admin on 19-06-2026


கீழச்சிவல்பட்டி பள்ளியில் சர்வதேச யோகா தினம்

கீழச்சிவல்பட்டி பள்ளியில் சர்வ தேச யோகா தினம்

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகாசன விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பள்ளிக்கல்விக்குழுத் தலைவர்  லெட்சுமணன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் பி.எல்.அழகுமணிகண்டன், பொருளாளர் டி.அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் 1500 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்பத்தூர் முன்னாள் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் மாணவர்களை வாழ்த்தி மாணவர்களின் கவனத்திறனை வளர்க்கும் யோகா ’என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்., தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் எம்.எஸ்.வாசு குறிப்பிட்ட சில யோகாசனங்களை மாணவர்களுக்கு செய்து காட்டி சிதறிய ஆற்றலை ஒன்று திரட்டி அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்த ஆசனங்களின் வகைகளான விருக்ஷானனம், சிரசாசனம், திராடகம், முத்திரைகளின் வகைகள், போன்ற பயிற்சிகளை அளித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்விக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.சுப்பிரமணியன், எஸ்.பி.கருப்பையா, பி.ஆர்.அம்மையப்பன், தொழிலதிபர் வள்ளியப்பன், எம்.சொக்கலிங்கம், உள்ளிட்ட ஆசிரியர்கள் வீரபத்ரன், மூர்த்தி, அழகுமீனாள், விஜயலெட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை ஆசிரியர்(பொறுப்பு) சு.கமலம் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் ஆ.தங்கராசு நன்றி கூறினார்.

Share: 548 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.