Posted by Admin on 18-06-2026
ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளில் 12வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்
காரைக்குடி அருகே, அமராவதிபுதூரில் அமைந்துள்ள, ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி நிறுவனங்களான, ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரிகளில் 12வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்திய அரசின் மினிஸ்ட்ரி ஆப் ஆயுஷ் -ன் வழிகாட்டுதலின் படி யோகா மற்றும் தியானப் பயிற்சிகளானது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் S.சுப்பையா ஆலோசனையின் படி நடைபெற்ற விழாவிற்கு ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் R. சிவகுமார் வரவேற்புரையாற்றினார்.
12வது சர்வதேச யோகா தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு INO ன் இணைச் செயலாளர், மதுரை வர்மா ஆசான், மருத்துவர் K. தம்பிதுரை கலந்து கொண்டு யோகா பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினர்.
யோகா பயிற்சிகளான சூரிய நமஸ்காரம், ஆசனப் பயிற்சிகள் மற்றும் மூச்சுப்பயிற்சி போன்றவற்றை பயிற்சியாளர் R.காளிஸ்வரி அவர்களும், தியானப் பயிற்சிகளானது தேவகோட்டை இதய நிறைவு தியான பயிற்சி குழுவினர்கள், M. ரவிச்சந்திரன், விஜயகுமார் மற்றும் சோமன் ஆகியோர் வழங்கினார்கள். இப்பயிற்சி முகாமில் யோகா மற்றும் தியான பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகளை விளக்கிக் கூறினார்கள். ஒவ்வொரு நாளும் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் மேற்கொள்ளும் போது மன அமைதி ஏற்படுகிறது, மன அழுத்தத்திலிருந்தும், மனச்சோர்விலிருந்தும் விடுதலை பெற முடியும். அதனால் புதிய நம்பிக்கை, மற்றும் புதிய எண்ணங்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும். யோகா மற்றும் தியானம் என்பது வெறும் பயிற்சிகள் மட்டுமல்ல மனிதனை ஒழுங்குபடுத்தும் மகத்தான மாமருந்து என்றும் கூறினார்கள். பயிற்சியாசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் யோகா சீருடை அணிந்து கலந்து கொண்டார்கள்.
நகர வைரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
வயிரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி செட்டியார்
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இலக்கியத் கருத்தரங்கு
அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் சாகித்திய அகாதமியின் இலக்கிய அரங்கு
மத்திய அரசின் சாகித்திய அகாதமியுட
Leave a Comment
Your comment will be visible after admin approval.