Posted by admin on 12-06-2026
"தமிழ்நாட்டில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லிகளை அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மட்டுமே விற்பனை செய்ய .வேண்டும் அதிக விலைக்கு விற்போர் மீது கடும் நடவடிக்கை பாயும்" இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு எச்சரிக்கை.
இயற்கை வளங்கள் துறை சார்பிலான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் டாக்டர் டி கே பிரபு தலைமையில் சென்னை கிண்டியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கல்குவாரி, கிரஷர், லாரி மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினர் கலந்துகொண்டனர். இவர்களிடம் தமிழகத்தின் கனிம வளங்கள் குறித்துத் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, யாரேனும் சட்டவிரோதமாகக் கல்குவாரிகளை நடத்தி வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி எந்தவொரு குவாரியும் கனிமங்களை வெட்டி எடுக்கக் கூடாது என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் அமைச்சர் டாக்டர் பிரபு தெரிவித்தார்.
மேலும், டிப்பர் லாரிகளில் அதிக அளவு பாரத்தை ஏற்றக் கூடாது என்றும், பாறைகளை வெடிக்கப் பயன்படுத்தும் வெடிபொருட்களை பதுக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, தமிழ்நாட்டில் எம்-சாண்ட், பி-சாண்ட் மற்றும் ஜல்லிகளை அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் டாக்டர் பிரபு தெரிவித்தார்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.