Posted by admin on 12-06-2026
சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வருகின்ற 13.06.2026 அன்று
சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தகவல்.
சிவகங்கை மாவட்டம் பொதுவிநியோகத் திட்டத்தில் 2026-ஆம் ஆண்டு ஜீன் மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற 13.06.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டும் பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.