Posted by admin on 10-06-2026
திருக்களாப்பட்டியில் மதுபானக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருக்களாப்பட்டியில் மதுபானக்கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே திருக்களாப்பட்டி அரசுப்பள்ளி அருகே மதுபானக்கடை இயங்கி வருகிறது. கடந்தவாரம் பள்ளிமாணவன் அஸ்வின்(14) தனது நண்பர்களுடன் அக்கடையில் மதுபானம் வாங்கி அருந்திய நிலையில் ஏற்பட்ட தகராறில் அஸ்வின் கழுத்தறுத்து கொ*ல செய்யப்பட்டான். இச்சம்பவத்தைக் கண்டித்தும் பள்ளி அருகே நடத்தப்படும் மதுபானக்கடையை அகற்றக்கோரியும் கிராமத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேவுகப்பெருமாள், மாவட்டத் தலைவர் சத்தியசீலன், சி.ஐ.டி.யு.மாவட்டச் செயலாளர் சேதுராமன், மாதர் சங்க துணைத் தலைவி சாந்தி, காந்திமதி மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் கிராம பொதுமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் மீனாம்பாள், மலர், பத்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.