Posted by Admin on 31-05-2026
100% வரை கல்வி உதவித்தொகை பெற சிறப்புத்தேர்வெழுதிய மாணவர்கள்
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி உறைவிடப் பள்ளியில் மாணவர்களின் திறமைக்கேற்ப 100% வரை கல்வி உதவித்தொகை பெற சிறப்புத்தேர்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
.
Sri Meenakshi Educational Trust மற்றும் Social Welfare Trust சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்விஉதவித்தொகைத் திட்டத்தின் கீழ் நடைபெறும் இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் 1% முதல் 100% வரை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளியின் தலைவர் பால.கார்த்திகேயன் கூறியதாவது, அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் நன்கொடையாளர்களின் பேருதவியோடு தொடங்கப்பட்ட இந்த கல்விஉதவித்தொகைத் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்கள் எந்தவித சிபாரிசும் இன்றி, பெற்றோர்களுக்கு கூடுதல் பொருளாதாரச் சுமை ஏற்படுத்தாமல், தங்களது சொந்த திறமை மற்றும் முயற்சியின் மூலம் கல்விச் செலவுகளை மேற்கொள்ளும் மனப்பக்குவத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்ப்பதாகும்.
Vertical Progress எனும் மதிப்பீட்டியல் அடிப்பையில், நுண்ணறிவுத்திறனாய்வு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் தேர்வு வினாக்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். கடந்த கல்வியாண்டில் தேர்வெழுதிய 341 மாணவர்களுக்கும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ரூ.23 லட்சம் வரையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு ஐம்பது லட்சம் ரூபாய் வரையிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தீர்மானித்து இருக்கின்றோம்" என்றார்.
மாணவர்களின் திறமையை அடையாளம் கண்டு அவர்களை உயர்வுபடுத்தும் இந்த முயற்சி, கல்வியின் மதிப்பையும் உழைப்பின் அவசியத்தையும் உணர்த்துகிறது.
இந்தத் தேர்வு பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த உதவித்தொகை, மாணவர்கள் கல்வியில் மேலும் சிறந்து விளங்க ஊக்கமளிப்பதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்கும் இந்த அரிய முயற்சிக்காக மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளி நிர்வாகத்தையும் அறக்கட்டளை நிர்வாகத்தையும் மனதார பாராட்டினர்.
"திறமைக்கு வாய்ப்பு – கல்விக்கு ஆதரவு" என்ற உயரிய நோக்கத்துடன் இந்த உதவித்தொகைத் திட்டம் தொடர்ந்து மாணவர்களின் எதிர்கால வெற்றிப் பாதையை அமைத்து வருகிறது.
நகர வைரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
வயிரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி செட்டியார்
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இலக்கியத் கருத்தரங்கு
அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் சாகித்திய அகாதமியின் இலக்கிய அரங்கு
மத்திய அரசின் சாகித்திய அகாதமியுட
Leave a Comment
Your comment will be visible after admin approval.