Posted by admin on 28-06-2026
சிவகங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! காரைக்குடியில் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு
சிவகங்கை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை, காரைக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பயன்பெறும் வகையில்
சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர நல மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட 1,197 நிரந்தர மையங்களிலும், 54 நடமாடும் மையங்களிலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட 19 இடைநிலை மையங்களிலும் என மொத்தம் 1,270 மையங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்களின் மூலம் சுமார் 1,00,779 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், பொது சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5,404 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மீண்டும் சொட்டு மருந்து வழங்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்றும், போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் அரசின் முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் டி.கே. பிரபு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் மீனாட்சி, காரைக்குடி மாநகராட்சி ஆணையர் கே. பாலு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி
4 மாவட்டங்களில் இருந்து 52 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்ட
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு
உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மூன்று மாவட்டங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல்
பாலாறு தடுப்பணை விவகாரம்: திட்டத்தை மறுஆய்வு செய்ய முதல்வருக்கு பி.ஆர். பாண்டியன் கோரிக்கை
பாலாறு குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு சிங்கம்புணரி பகுதி விவசாயிகள் எதிர்ப்பு
தடுப்பணை கட்டும் இடத்தில் தமிழ்நாடு
Leave a Comment
Your comment will be visible after admin approval.