Mon, Jun 29, 2026 12:20 PM

வித்யா கிரி கல்லூரியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா

Posted by admin on 25-06-2026


வித்யா கிரி கல்லூரியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா

புதுவயல்  வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

தமிழ் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். துணை முதல்வர் லட்சுமி கல்வி சார்ந்த ஒருங்கிணைப்பாளர் நாகேஸ்வரி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழ் துறை தலைவர் சேது கல்பனா வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் கண்ணதாசனை பற்றி மாணவ, மாணவிகள் பாடல் கவிதை மற்றும் பேச்சு ஆகியவற்றின் மூலம் அவரைப்  பெருமைப்படுத்தினர்.பேராசிரியர் தமிழரசன் நன்றி கூறினார்.இந்த விழாவில்  பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்  சுதாகர் ஒருங்கிணைத்திருந்தார்.

Share: 1,227 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.