Fri, Aug 28, 2026 01:50 PM

காரைக்குடியில் அமைச்சர் டி.கே பிரபு முன்னிலையில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

Posted by Admin on 26-06-2026


காரைக்குடியில் அமைச்சர் டி.கே பிரபு முன்னிலையில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

ஓபிஎஸ் அணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாலா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் அமைச்சர் TK பிரபு முன்னிலையில்

தங்களை இணைத்துக் கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் ஓபிஎஸ் அணி செயல்பட்டபோது அவரது அணியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்தவர் பாலா. ஓபிஎஸ் திமுகவில் இணைந்த பின்பு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார் பாலா. தற்பொழுது இவரது தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காரைக்குடியில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு முன்னிலையில் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கழகத்தில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் டி.கே. பிரபு கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

Share: 1,321 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.