Posted by admin on 26-06-2026
சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நூல் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின் 100 ஆவது பிறந்தநாளையொட்டி நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அவர் பிறந்த வீட்டில் பாரதி இலக்கியக்கழககமும் திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு சங்கமும் இணைந்து கவிஞரின் 100 பிறந்தநாளை கொண்டாடியது. இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் தலைமை வகித்தார்,. பாரதி இலக்கியக்கழகத் தலைவர் ஜெ.யச்சந்திரன் புலவர் மெய்யாண்டவர், கண்ணதாசன் மகள் விசாலி, குடும்பத்தினர் பழனியப்பன், சாத்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், விழாவின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு நீயே உனக்கு என்றும் நிகரானவன் என்ற தலைப்பில் நூலினை வெளியிட சேதுபாஸ்கரா கல்விக்குழும நிறுவனர் சேதுகுமணன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் கண்ணதாசனின் வாழ்க்கைத் தொகுப்பினை குறித்துப் பேசினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கவிஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். விழாக்குழு சார்பில் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.