Fri, Aug 28, 2026 10:06 AM

மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Posted by admin on 24-06-2026


மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மானாமதுரையில் மின்சாரம் தாக்கி மண்பாண்ட தொழிலாளி பரிதாப பலி: சோகத்தில் மூழ்கிய மண்பாண்டக் தொழிலாளர்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மின்சாரம் தாக்கி மண்பாண்ட தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வசித்து வந்தவர் சத்தியமூர்த்தி (32). மண்பாண்ட தொழிலாளியான இவர், வழக்கம்போல்  தனது தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
​மண்பாண்டங்களை வடிவமைப்பதற்காக மின்சாரத்தால் இயங்கும் மண்பாண்ட இயந்திரத்தை அவர் இயக்கியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக சத்தியமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது.
மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
​மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மண்பாண்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share: 1,000 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.