Fri, Aug 28, 2026 12:58 PM

ஊடக பேட்டிக்காக டாஸ்மாக் ஊழியர் மீது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by Admin on 23-06-2026


ஊடக பேட்டிக்காக டாஸ்மாக் ஊழியர் மீது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊடகத்திற்கு பேட்டி அளித்த டாஸ்மாக் ஊழியரை தற்காலிக பணி நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய கோரி சிவகங்கையில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு, சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் மன்றம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்த மாநில சம்மேளன (CITU) துணைப் பொதுச் செயலாளர் ஜான் (எ) ராதாகிருஷ்ணன் மீது எடுக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும், தொழிற்சங்க தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என முழக்கமிட்டனர்.

Share: 1,259 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.