Fri, Aug 28, 2026 11:05 AM

மானாமதுரையில் 5 மாதங்களாக திறக்கப்படாத புதிய அங்கன்வாடி கட்டிடம்

Posted by admin on 23-06-2026


மானாமதுரையில் 5 மாதங்களாக திறக்கப்படாத புதிய அங்கன்வாடி கட்டிடம்

மானாமரையில் 5 மாதங்களாக திறக்கப்படாத புதிய அங்கன்வாடி கட்டிடம் – பழுதடைந்த கட்டிடத்தில் அவதிப்படும் 35 குழந்தைகள்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார்தெரு செட்டிக்குளம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அனைத்து பணிகளும் முடிவடைந்து 5 மாதங்கள் கடந்தும் இதுவரை திறக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது அங்கன்வாடி மையம் பழைய கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. இங்கு 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்று வரும் நிலையில், கட்டிடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகளும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, கட்டிடத்தின் தரைத்தளம் பல இடங்களில் பெயர்ந்து சேதமடைந்துள்ளதுடன், மின்விசிறிகளும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் கடும் வெப்பத்திலும் குழந்தைகள் சிரமத்துடன் கல்வி கற்று வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு தயாராக இருந்தும் திறக்கப்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்பியுள்ளனர். உடனடியாக புதிய கட்டிடத்தை திறந்து குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share: 1,241 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.