Posted by admin on 23-06-2026
சேம்பார் நடுநிலைப்பள்ளியில் செஸ் போட்டி
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் சேம்பார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுரேஷ் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சதுரங்கம் எவ்வாறு விளையாடுவது என்ற பயிற்சி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சுரேஷ் வழங்கினார். ஸ்மார்ட் டிவியில் வீடியோக்கள் ஒளிபரப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சேம்பார் நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 12 பேரும் 6 முதல் 8 மாணவர்கள் 20 பேரும் கலந்து கொண்டனர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல் இடத்தை மாணவன் முகேஷ் இரண்டாவது இடம் டார்வின் தாவீது பெற்றனர். மூன்று மற்றும் நான்காம் இடம் முறையே மகதி ,அருள் ஜோஸ்வின் வெற்றி பெற்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் முதலிடம் ஆர்வின் இரண்டாம் இடம் செலினா மூன்றாம் இடம் ஜோய் வின் வெற்றி பெற்றனர். அனைத்து போட்டிகளையும் தலைமையாசிரியர் சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் காளீஸ்வரன், முத்துக்குமார், முருகன், சகாய செல்வி, பாரதி மலர், தனபாக்கியம் ஆகியோர் நடத்தினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நகர வைரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
வயிரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி செட்டியார்
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இலக்கியத் கருத்தரங்கு
அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் சாகித்திய அகாதமியின் இலக்கிய அரங்கு
மத்திய அரசின் சாகித்திய அகாதமியுட
Leave a Comment
Your comment will be visible after admin approval.