Mon, Jun 29, 2026 11:15 AM

பாலதண்டாயுதபாணி கோவிலில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளி கவசத்தில் காட்சி தந்த சுவாமி

Posted by admin on 23-06-2026


பாலதண்டாயுதபாணி கோவிலில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு    வெள்ளி கவசத்தில் காட்சி தந்த சுவாமி

சிங்கம்புணரி அருகே பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் 100 ஆண்டுகள் நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியம் பெற்று சிறப்பான வாழ்வு அமைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், பால்குட அபிஷேக ஆராதனை நடைபெற்றது

*தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சந்தன காப்பில் வெள்ளி கவசத்தில் காட்சி தந்த சுவாமி பால தண்டாயுதபாணி*

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வாராப்பூர் கிராம மக்கள் சார்பில் 400 ஆண்டுகள் பழமையான பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் 100 ஆண்டுகள் நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியம் பெற்று சிறப்பான வாழ்வு அமைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மங்கள இசை, தேவதா அனுக்ஞை, எஜமானர் அனுக்ஞை, கணபதி பூஜை, மஹா சங்கல்பம், புன்யாகவாஜனம், மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து புனித நீரால் நிரப்பப்பட்ட 108 சங்குகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலை அடைந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனையுடன் நிறைவு பெற்றது.

தொடர்ந்து சுவாமி பால தண்டாயுதபாணிக்கு திருமஞ்சனம், மஞ்சள், இளநீர், தயிர்,பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் மூலம் அபிஷேகமும்,பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சுவாமி பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகமும்,108 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை கொண்டு சுவாமிக்கு சங்காபிஷேகமும்  நடைபெற்றது.

தொடர்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளில் சுவாமி பால தண்டாயுதபாணி சிறப்பு மலர் அலங்காரத்தில் சந்தன காப்பில்,வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து வந்திருந்த 500 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Share: 729 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி காரைக்குடியில் நடைபெற்ற கிடாய் சண்டை போட்டி 4 மாவட்டங்களில் இருந்து 52 ஜோடி கிடாய்கள் பங்கேற்பு சிவகங்கை மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா   அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள்–ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அமைச்சர் டி.கே பிரபு பங்கேற்பு உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மூன்று மாவட்டங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் முதல் காரைக்குடியில் போலியோ சொட்டு  மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு காரைக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.கே. பிரபு சிவகங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! காரைக்குடியில் முகாமை தொடங்கி வைத்த அம
Leave a Comment

Your comment will be visible after admin approval.