Fri, Aug 28, 2026 11:56 AM

திருப்பத்தூர் அரசு பள்ளியில் சர்வதேச யோகா தினம்

Posted by admin on 22-06-2026


திருப்பத்தூர் அரசு பள்ளியில் சர்வதேச யோகா தினம்

அரசுப்பள்ளியில் சர்வதேச யோகா தினம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  சர்வதேச யோகா தினம் மற்றும் ஆசிரியர்களுக்குப் பாராட்டுச்சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

                        பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்குத்  தலைமை  ஆசிரியர்  பாரதிதாசன் தலைமை வகித்தார். யோகா பயிற்றுநராக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவப்பிரிவு மருத்துவர் ராகசுதா மாணவர்களுக்கு யோகாவின் நன்மைகளை எடுத்துக்கூறி  செயல்விளக்கப் பயிற்சி அளித்தார். துணை பயிற்றுநராக செவிலியர் ஆனந்தி பங்கு கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுத் தேர்வில் நூறுசதவிகிதம் தேர்ச்சி பெற்றமைக்கு ஆசிரியர்களைப் பாராட்டும் விதமாக அரசு சார்பில் வழங்கபட்ட பதக்கம், கேடயம், சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் ஆசிரியர்களுக்கு வழங்கி கௌரவித்தார். இதில் பள்ளி மேலாண்மைக்குழுத் துணைத் தலைவர் சரவணன், ஆசிரியர்கள் பாண்டியன், ரவீந்திரன், மாதவன், முத்துப்பாண்டி, ஆண்டனி, வெங்கட்ராமன்,பிரியா, ஜாபர்நிஷா , ஆறுமுகம், தேவி, பாகம்பிரியாள், ரூபினாபானு, ஜெயமேரி, முத்துக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை தேவி நன்றி கூறினார்.

Share: 835 Views

மேலும் படிக்க

காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர் சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள   அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment

Your comment will be visible after admin approval.