Posted by admin on 22-06-2026
கீழ்க்கோட்டையில் உலக மழைக்காடுகள் தினம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக உலக மழைக்காடு தினம் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். கணினி பயிற்றுநர் வித்யா வரவேற்றார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி பேசும்போது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 22 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மழைக்காடுகளின் முக்கியத்துவம்அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் அவற்றின் பங்கு குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் காடழிப்பைத் தடுக்கவும் காடுகளை மீட்டெடுக்கவும் மக்களை ஒன்றிணைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.இந்த தினம் 2017 ஆம் ஆண்டு இலாப நோக்கமற்ற அமைப்பான ரெய்ன்ஃபாரஸ்ட் பார்ட்னர்ஷிப் மூலம் தொடங்கப்பட்டது. பூமியில் உள்ள நன்னீரில் 20 சதவீதமும் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 20 சதவீதமும் அமேசான் போன்ற மழைக்காடுகளிலிருந்துதான் கிடைக்கின்றன. மேலும் உலகின் நிலப்பரப்பு உயிரினங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை இங்குதான் வாழ்கின்றன. 2026 ஆம் ஆண்டிற்கான உலக மழைக்காடுகள் தினத்தின் உலகளாவிய கருப்பொருள் தி ஃபாரஸ்ட் வித்தின் யூ என்பதாகும். மழைக்காடுகள் உலகின் வெப்பநிலை மற்றும் பருவமழையைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் விவசாயம் சுரங்கம் மற்றும் மரம் வெட்டுதல் போன்ற காரணங்களால் மழைக்காடுகள் வேகமாக அழிந்து வருகின்றன. எனவே நாம் அனைவரும் மரங்களை நேசிப்போம் இயற்கையை பாதுகாப்போம் பசுமையை வளர்ப்போம் என்றார். கொட்டக்குடி ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை ஆசிரியர்களுடன் இணைந்து நட்டனர். கணிதப் பட்டதாரி ஆசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.
நகர வைரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
வயிரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி செட்டியார்
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இலக்கியத் கருத்தரங்கு
அழகப்பா பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் சாகித்திய அகாதமியின் இலக்கிய அரங்கு
மத்திய அரசின் சாகித்திய அகாதமியுட
Leave a Comment
Your comment will be visible after admin approval.