Fri, Aug 28, 2026 12:58 PM

இலுப்பக்குடியில் யோகா வடிவில் மிரள வைத்த ITBP வீரர்கள்

Posted by admin on 21-06-2026


இலுப்பக்குடியில் யோகா வடிவில் மிரள வைத்த ITBP வீரர்கள்

ஒரே சீருடை... ஒரே நோக்கம்...
ஒற்றுமையின் சக்தி! களமிறங்கிய 1400 பாதுகாப்பு வீரர்கள்

யோகா வடிவில் ! மிரள வைத்த ITBP வீரர்கள் காட்சி

1400 வீரர்கள்... யோகா வடிவில் அணிவகுப்பு!
"Yoga for Healthy Ageing" விழிப்புணர்வை ஏற்படுத்திய ITBP வீரர்கள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடியில் உள்ள இந்தோ திபத் எல்லை பாதுகாப்பு படை (ITBP) பயிற்சி மையத்தில் 1400 வீரர்கள் பங்கேற்று, மைதானத்தில் யோகா வடிவில் அணிவகுத்து நின்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
இந்த ஆண்டின் மையக்கருப்பொருளான "Yoga for Healthy Ageing" (ஆரோக்கியமான முதுமை அடைதலுக்கான யோகா) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ITBP டி.ஐ.ஜி ஜஸ்டின் ராபர்ட் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு சார்பில் மருத்துவர் வை. தங்கம் BNYS, உதவி மருத்துவ அலுவலர் அவர்கள் வீரர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.
யோகாவின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் 1400 வீரர்களின் இந்த பிரம்மாண்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Share: 1,436 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.