Fri, Aug 28, 2026 12:48 PM

தவெக நிர்வாகி மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா

Posted by admin on 19-06-2026


தவெக நிர்வாகி மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில்     ஆரம்பப் பள்ளி  மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா

வரும் 22ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், தொழிலதிபருமான மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு நோட்டு, புத்தகம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.


காரைக்குடி முத்துப்பட்டினம் மூன்றாவது வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சரஸ்வதி ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தமிழக முதலமைச்சர் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும்,  தொழிலதிபருமான  மருங்கிப்பட்டி ரமேஷ் சார்பில் நோட்டு, புத்தகம் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கிட் அண்ட் கிம்  கல்லூரி நிறுவனர் ஐயப்பன், மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Share: 1,984 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.