Fri, Aug 28, 2026 12:40 PM

காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை

Posted by admin on 18-06-2026


காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில்    லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை

காரைக்குடி மோட்டார் வாகன அலுவலர் ஆய்வாளர் அலுவலகத்தில் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மோட்டார் வாகன அலுவலகத்தில் சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே சென்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் கதவு ஜன்னல்களை பூட்டி வைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் மோட்டார் வாகன அலுவலகத்துக்குள் லைசன்ஸ் வாங்க வந்தவர்கள் ஆர்சி புக் ரினிவல் பண்ண வந்தவர்கள், உள்ளே உள்ளவர்கள் யாரையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வெளியே விடாமல் சோதனை செய்து வருகின்றனர்.

Share: 1,657 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.