Fri, Aug 28, 2026 11:54 AM

திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

Posted by admin on 15-06-2026


திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

திருப்பத்தூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா  
 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  முப்பெரும் விழா நடைபெற்றது.

 போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மன்ற துவக்கவிழா அரசு பொதுத் தேர்வில் நூறுசதவிகிதம் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்திக்காட்டிய ஆசிரியப் பெருமக்களுக்குப் பாராட்டு விழா, உலக முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு உறுதிமொழி என முப்பெரும் விழாவாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பாரதிதாசன் தலைமை வகித்தார். ஆசிரியர் ரவீந்திரன், மாவட்ட பசுமைத் தோழர் சர்மிளா, பள்ளி மேலாண்மைக்குழுத்துணைத் தலைவர் சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சீனிவாசசேதுபதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உலக முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சதவிகிதம் உயர்த்திக்காட்டியதற்கு சிறப்பு பரிசு வழங்கி கௌரவித்தார். பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கு கொண்ட போதை ஓழிப்பு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணியை  கொடியசைத்து துவக்கி வைத்தார். தேசிய மாணவர் படையினர் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் இப்பேரணியில் பங்கு  கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் சண்முகம், முன்னாள் மாணவர் எம்.தினேஷ்குமார், ஆசிரியர்கள் ரேணுகா, பிரியா, ஆறுமுகம், தேவி, பரமேஸ்வரி, முத்துக்கனி, பாகம்பிரியாள், முத்துப்பாண்டி, ஆண்டனி, வெங்கட்ராகவன், ஜாபர்நிஷா, ஜெயமேரி  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் ஆசிரியர் பாண்டியன் வரவேற்றார். விழா முடிவில் ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Share: 155 Views

மேலும் படிக்க

காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர் சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள   அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment

Your comment will be visible after admin approval.