Fri, Aug 28, 2026 10:00 AM

நகரம்பட்டியல் ரூபாய் 28.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்

Posted by admin on 12-08-2026


நகரம்பட்டியல்  ரூபாய் 28.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்

நகரம்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்  மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ரூ.28.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி உள்வட்டத்திற்குட்பட்ட நகரம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் பி. ஆகாஷ், ஐ.ஏ.எஸ்., 117 பயனாளிகளுக்கு ரூ.28.70 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சமுதாய கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தகுதியான பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் உதவித்தொகைகள், கூட்டுறவு பயிர் கடனுக்கான காசோலைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் மகளிர் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி கிராம மக்களையும் சென்றடையும் வகையில் மக்கள் தொடர்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால் சென்டர் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share: 19 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.