Fri, Aug 28, 2026 10:01 AM

காளாப்பூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

Posted by admin on 12-08-2026


காளாப்பூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

கொக்கன் கருப்பர் கோவில் ஆடி களரி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் 47 ஜோடி மாடுகள் பங்கேற்பு.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூரில்  30 ம் ஆண்டு ஆடி களரி விழாவினை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இரு பிரிவிளாக நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 14 ஜோடி மாடுகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 33 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு போட்டிக்கான எல்லையாக 8 மைல் தூரமும், சின்ன மாட்டிற்கு போட்டிக்கான எல்லையாக 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் பங்கேற்றன. காரைக்குடி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்  நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையில் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கும், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது

Share: 11 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.