Fri, Aug 28, 2026 11:03 AM

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விதை திருவிழா

Posted by admin on 09-08-2026


சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விதை திருவிழா

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விதை திருவிழா – மாணவர்களிடம் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு


சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய விதைகளை பாதுகாக்கும் நோக்கில் பாரம்பரிய விதை திருவிழா நடைபெற்றது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இயற்கை வேளாண் ஆர்வலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாரம்பரிய விதை திருவிழாவில், தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் மற்றும் பல்வேறு பயிர் விதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

நவீன விவசாய முறைகளால் மறைந்து வரும் பாரம்பரிய விதைகளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விதை கண்காட்சியில் மாப்பிள்ளை சம்பா, கருப்புக்குறுவை, கிச்சிலி சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களும், கம்பு, கேழ்வரகு, தினை போன்ற சிறுதானியங்களும் இடம்பெற்றன. ஒவ்வொரு விதையின் மருத்துவ குணங்கள், சாகுபடி முறைகள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புகள் குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டன.

மேலும், இயற்கை வேளாண்மை, விதை சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து நிபுணர்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாரம்பரிய தானியங்களில் இருந்து செய்யப்பட்ட உணவு வகைகளை பலரும் ஆர்வத்துடன் சுவைத்து மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பாரம்பரிய விதைகளை பாதுகாப்பதுடன், அடுத்த தலைமுறையினரிடம் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை கொண்டு செல்ல முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மாணவர்கள் இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் இயற்கை வேளாண்மை குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம்."


பாரம்பரிய விவசாய மரபுகளை மீட்டெடுத்து, மாணவர்களிடையே இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த விதை திருவிழா, பங்கேற்றவர்களின் பாராட்டைப் பெற்றது.

Share: 17 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.