Posted by Admin on 06-08-2026
அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து
காவல்துறை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு விதிகளை மீறி அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹார்ன் பொருத்தி இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அளித்த புகாரின் பேரில், காரைக்குடி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பேருந்துகளை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், அரசு விதிகளுக்கு முரணாக அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் அந்த ஏர் ஹார்னை உடனடியாக அகற்றி, மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் அதே அரசு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் டயருக்கு அடியில் வைத்து நொறுக்கி அழித்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் விதிமீறி ஏர் ஹார்ன் பயன்படுத்தும் வாகனங்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.