Fri, Aug 28, 2026 10:01 AM

காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்

Posted by admin on 06-08-2026


 காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்

காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார். 
அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

காரைக்குடி கழனி வாசல் பகுதியைச் சேர்ந்த கே. ஜெகநாதன் என்பவர் கடந்த 19 .5 .2015 அன்று சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம் செய்வதாக ஒப்புதல் கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில்  இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது விருப்பத்தின் பேரில் அமெரிக்காவில் வசித்த அவரது மகள் கவிதா ஜெகநாதன் ,மருமகன் கதிரவன், பேரன் முனுசாமி, காவியன், க்ரிதின், பேத்தி கெளஷிகா மற்றும் குடும்பத்தினர் உடலை  மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்கான பயன்பாட்டிற்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. தமிழ்வாணன் அனாடமி துறைத்தலைவர் மரு. கற்பக ஜோதி, இணை பேராசிரியர் பாரதி ராணி RMO மரு.முகமது ரபி ARMO மரு. தென்றல் மரு. வெங்கடேஷ் முன்னிலையில் ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணன், லயன் சங்கத்தைச் சேர்ந்த எஸ் கே எஸ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share: 3,362 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.