Posted by admin on 23-07-2026
இலுப்பக்குடி சிவன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு முயற்சி: 2 ஜே.சி.பி. வாகனங்கள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி அருள்மிகு சுயம்புபிரகாசேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றம் செய்து ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சி நடைபெற்றதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவிலின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினர் ஏற்கனவே வருவாய்த் துறை மற்றும் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த வட்டாட்சியர் ராஜா மற்றும் காவல்துறையினர், நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 2 ஜே.சி.பி. இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
கோவில் சொத்துக்களை மீட்டு, ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே பழனி கோவில் நிலம் தொடர்பான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இலுப்பக்குடி கோவில் நிலத்தை விற்பனை செய்ய முயன்றதாக எழுந்துள்ள புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.