Fri, Aug 28, 2026 11:03 AM

திருப்பத்தூரில் ஜனநாயகன் ரிலீஸ் கொண்டாட்டம்

Posted by admin on 23-07-2026


திருப்பத்தூரில் ஜனநாயகன் ரிலீஸ் கொண்டாட்டம்

திருப்பத்தூரில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் கொண்டாட்டம்: தியேட்டர் முன் டி.ஜே. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் குத்தாட்டம்

தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற டி.ஜே. இசை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடினர். இதில் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் இளைஞர்களுக்கு இணையாக ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


திருப்பத்தூர் தங்கமணி திரையரங்கம் முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் டி.ஜே. இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு விஜய் திரைப்பட பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடினர். அப்போது தவெகவில் இணைந்த முன்னாள் எஸ்.புதூர் அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பையாவும் திடீரென ரசிகர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டது கவனத்தை ஈர்த்தது.

விஜய் பாடல்களுடன் நடிகர் அஜித்குமார் நடித்த திரைப்படப் பாடல்களும் ஒலிபரப்பப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.


ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்வின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Share: 26 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.