Fri, Aug 28, 2026 11:57 AM

பொதுமக்களுடன் அமர்ந்து ஜனநாயகன் திரைப்படம் பார்த்த அமைச்சர் டாக்டர் டிகே பிரபு

Posted by admin on 23-07-2026


பொதுமக்களுடன் அமர்ந்து ஜனநாயகன்  திரைப்படம் பார்த்த அமைச்சர் டாக்டர் டிகே பிரபு

காரைக்குடியில் ஜனநாயகன் திரைப்படத்தை கனிம வளத்துறை அமைச்சர் டிகே பிரபு திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார்.

காரைக்குடியில் தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் வெளியான ஜனநாயகன் திரைப்படம் இன்று காலை பாண்டியன் திரையரங்கில் திரையிடப்பட்டது. தமிழக கனிமவள அமைச்சர் டாக்டர் பிரபு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார். முன்னதாக  தியேட்டர்  வளாகத்தை சுற்றிலும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு பாடல் இசைக்கப்பட்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சிறப்பு காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின்  நிர்வாகிகளும், ரசிகர்களும்  ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்து ரசித்தனர்.

Share: 14 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.