Posted by admin on 14-07-2026
அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல்: இளையான்குடி–சிவகங்கை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கை அருகே பசும்பொன் நகர் பகுதி மக்கள், சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி இளையான்குடி–சிவகங்கை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனால் இளையான்குடி–சிவகங்கை நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
"அடிப்படை வசதிகள் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும்" என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.