Fri, Aug 28, 2026 12:56 PM

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி

Posted by admin on 13-07-2026


உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி விழிப்புணர்வு ரதத்தையும் பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தாய்-சேய் நல மருத்துவமனை வரை நடைபெற்ற பேரணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

"தாய் மற்றும் குழந்தை நலனுக்காக கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான இடைவெளியைப் பேணுவோம்" என்ற கருப்பொருளை வலியுறுத்தி, குடும்ப நலத் திட்டங்கள் மற்றும் மக்கள்தொகை நிலைப்படுத்துதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Share: 13 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.