Fri, Aug 28, 2026 12:04 PM

காரைக்குடியில் இரண்டு மாத பெண் குழந்தையை எடுத்துச் சென்ற நபர்கள் மீது தாய் காவல் நிலையத்தில் புகார்.

Posted by Admin on 12-07-2026

காரைக்குடியில் இரண்டு மாத பெண் குழந்தையை எடுத்துச் சென்ற நபர்கள் மீது தாய் காவல் நிலையத்தில் புகார்.

காரைக்குடியில் இரண்டு மாத பெண் குழந்தையை எடுத்துச் சென்ற நபர்கள் மீது தாய் காவல் நிலையத்தில் புகார்.

புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்

பிறந்து இரண்டு மாதமே ஆன பெண் குழந்தையை

அடையாளம் தெரிந்த நபர்கள்

தூக்கிச் சென்றதாக குழந்தையின் தாய் லட்சுமி (36), காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியாவிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், தனக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருப்பதை அறிந்த சிலர், நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை மூன்று லட்ச ரூபாய் தருகிறோம் என விலைக்கு கேட்டதாகவும், தர மறுத்ததால் பணத்தை வீட்டில் வைத்துவிட்டு குழந்தையை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதாகவும் கூறியிருந்தார்.

காவல் உதவி கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், குழந்தையை தூக்கிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share: 867 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.