Fri, Aug 28, 2026 12:05 PM

4 ஆண்டுகளாக இருளில் மேம்பாலம்... மின் விளக்குகள் இல்லாததால் தொடரும் விபத்துகள்!

Posted by Admin on 12-07-2026


4 ஆண்டுகளாக இருளில் மேம்பாலம்... மின் விளக்குகள் இல்லாததால் தொடரும் விபத்துகள்!

காரைக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக ரயில்வே தண்டவாளத்தை கடக்க போடப்பட்ட மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இருளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி

திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க போடப்பட்ட சாலை மேம்பாலம் மின் விளக்கு வசதி செய்யப்படாமல்

போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால், எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதற்கு

முகப்பு விளக்கு மட்டுமே பயன்பட்டு வருவதால்

அடிக்கடி

விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

உடனடியாக பாலத்தில் மின் விளக்கு வசதி செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பகுதி மக்கள் நீண்ட நாளாக எழுப்பி வரும் நிலையில்,

இதுகுறித்து,

தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விரைவில் மின்விளக்கு அமைத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்

Share: 998 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.