Fri, Aug 28, 2026 10:01 AM

தேவகோட்டை புத்து முனீஸ்வரர் ஆலய 44 ஆம் ஆண்டு பால்குடம்

Posted by admin on 10-07-2026


தேவகோட்டை புத்து முனீஸ்வரர் ஆலய 44 ஆம் ஆண்டு பால்குடம்

தேவகோட்டை புத்து முனீஸ்வரர் ஆலய 44 ஆம் ஆண்டு பால்குடம் விமர்சையாக நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதாவூரணி அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன்  புத்துமுனிஸ்வரர் ஆலய 44 ஆம் ஆண்டு பூச்சொரிதல்  விழா  ஜூலை 3-ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கப்பட்டு தினந்தோறும் மாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் பூஜைகள் மற்றும் 8-ஆம் தேதி  திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலையில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் வெயில் காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்து பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டார்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

Share: 25 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.