Posted by Admin on 08-07-2026
வேங்கைபட்டி மாணவர்களுக்கு பேருந்து வசதி கோரி கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைபட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி நேரங்களில் பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 1000 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிங்கம்புணரி மற்றும் பிரான்மலையில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். கிராமத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி இயங்குவதால், மேல்நிலை வகுப்பு மாணவர்கள் தினமும் 4 முதல் 5 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் நடந்து செல்லவோ அல்லது வழியில் செல்லும் வாகனங்களில் உதவி கேட்டு பள்ளிக்குச் செல்லவோ கட்டாயப்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.
எனவே, சிங்கம்புணரியில் இருந்து வேங்கைபட்டி வழியாக பிரான்மலை செல்லும் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.