Posted by admin on 07-07-2026
சிங்கம்புணரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி; மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளியில் பயிலும் 300 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
அப்போது மாணவர்களுடன் உரையாடிய எம்.எல்.ஏ., தனது பெயரை தைரியமாக கூறிய மாணவனை பூங்கொத்து வழங்கி பாராட்டியதுடன், துணிச்சலுடன் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளி வளாகம், கழிவுநீர் வாய்க்கால், அங்கன்வாடி மையம், சத்துணவுக் கூடம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த அவர், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் திண்டுக்கல் சாலையில் செயல்படாமல் உள்ள உழவர் சந்தையை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து கடைகளை இயக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த திடீர் ஆய்வு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.