Posted by admin on 07-07-2026
வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஆட்சி திமுக; தற்போதைய அரசு மக்களை ஏமாற்றுகிறது - கே.ஆர். பெரியகருப்பன் குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அவர், கலைஞர் மற்றும் திமுக ஆட்சிகள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதாகக் கூறினார். திமுக ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்க சதவீதத்திற்கு உயர்த்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகவும், விவசாயிகள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.