Posted by admin on 04-07-2026
திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம். 25 ஜோடி மாடுகள் பங்கேற்பு. தெருவில் சுற்றி திரிந்த மாடுகளும் கலந்துகொண்டு ஓடியதால் பார்வையாளர்கள் உற்சாகம்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தென்மாப்பட்டு கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரு சுற்றுகலாக மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு பிரிவில் 9 ஜோடி மாடுகளும் சின்ன மாட்டுப் பிரிவில் 16 ஜோடி மாடுகளும் என மொத்தம் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. திருப்பத்தூர் சிவகங்கை சாலையில் நடைபெற்ற இப் போட்டியில் சிவகங்கை மதுரை தேனி திண்டுக்கல் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் மாடுகள் சீறிபாய்ந்து சென்று ஒன்றை ஒன்று முந்தி சென்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டியின் இடையே சாலையில் கூட்டமாக சுற்றி திரிந்த மாடுகளும் ஓடியதால் பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். மிக விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா குழுவினர் சார்பில் ரொக்க பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
கொல்லங்குடியில் களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடியில் மு
சட்ட விரோத மின்வேலியில் சிக்கி இளைஞர் ப*லி.
மானாமதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!
மானாமதுரை மண்பாண்டத்தில் களிமண்ணால் ஆன விநாயகருக்கு பணிகள் தீவிரம் 10 தினங்களில் வர்ணம் தீட்டு பணிகள் தொடக்கம்
Leave a Comment
Your comment will be visible after admin approval.